• பொதுத்துறை வங்கிகளில் 12,000 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு..
 • மதுரையில் ஸ்டார்ட் அப் இலவச கருத்தரங்கம்
 • management
 • சரிவை சந்தித்து வரும் டாடா நிறுவனம்..
 • இந்திய பங்குச்சந்தைகளில் எழுச்சி
 • ஆடு வளர்ப்பு, அடிப்படைச் செய்திகள்!
 • GDP of India
 • success stories

SME STARTUPS

 • ஸ்டார்ட் அப்
  காபி டிக்காஷனில் தொடங்கி காய்கறி விற்பது வரைக்கும் புதுமையான சுயதொழில் ஐடியாக்களுடன் ஸ்டார்ட்அப் முயற்சி நாடு முழுவதும் பிரபலமாகி வருகிறது. இளைஞர்கள் இணைந்து தொடங்கும் இதுபோன்ற புதுமை தொழில் ஐடியாக்கள், சில ஆண்டுகள் வெற்றியை தொட்டதும் , கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டித்தருகிறது. சிறந்த ஸ்டார்ட்அப் முயற்சிகளுக்கு நிதி உதவி செய்யவும், வெற்றிகரமான ஸ்டார்ட் அப் நிறுவனங்களை கோடிக்கணக்கில் வாங்குவதற்கும் பிரபல நிறுவனங்கள் காத்திருக்கின்றன.

  இளைஞர்களுக்குத் தேவை நல்ல ஐடியாவும், தொழில் முயற்சியும், கடின உழைப்பும், துறை சார்ந்த அறிவு மட்டுமே. கல்லுாரி மாணவர்கள், சிறுவணிகர்கள், மகளிர் சுயஉதவிக் குழுக்கள், பெண்கள், விவசாய குடும்பத்தில் உள்ள பட்டதாரி இளைஞர்கள் என பல தரப்பினரும் ஸ்டார்ட் அப் முயற்சிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். வேலைக்குச் செல்வதைவிட, இளமை பருவத்திலேயே தொழில் தொடங்க வேண்டும் என்பதே இப்போதைய இளைஞர்களின் துடிப்பு. இதற்காக புதுமையான ஸ்டார்ட்அப் ஐடியாக்களுடன் தொழில் முயற்சியில் களம் இறங்குகின்றனர். வீட்டிலிருக்கும் படித்த பெண்களிடமும், இல்லத்தரசிகளிடமும் ஸ்டார்ட்அப் வேகம் அதிகரித்துள்ளது.
  ஸ்டார்ட் அப்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், துபாய் வங்கியான, எமிரேட்ஸ் என்பிடியின் இந்தியாவுக்கான தலைமை செயல் அதிகாரி சேதுராமன் சாத்தப்பன்.

  மதுரையில் வரும் ஞாயிறன்று மதியம் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை, “டெக்னாலஜி அல்லாத ஸ்டார்ட் அப்- கள் : செய்யக்கூடியதும், செய்யகூடாததும்” என்ற தலைப்பில் சேதுராமன் சாத்தப்பன் பேச இருக்கிறார். இந்த நிகழ்வு மதுரை பைபாஸ் ரோடு, பிக் பஜார் பேஸ்மென்டில் உள்ள லோட்டஸ் ஹாலில் நடைபெறவுள்ளது.

  இது, தொழில் முனைவோர், மாணவர்கள், பெண்கள், ஸ்டார்ட் அப்- களுக்கு புதிய வாய்ப்புகளை திறந்துவிடும். இந்த கருத்தரங்கில், அடிப்படையான ஸ்டார்ட் அப் மற்றும் அனுபவ தகவல்கள் விளக்கப்படும்.

  டெக்னாலஜி ஸ்டார்ட் அப்கள் பரவலாக நிறைய உள்ளன. ஆனால் சிறிய நகரங்களில் டெக்னாலஜி சம்பந்தம் இல்லாத மற்ற ஸ்டார்ட் அப் ஐடியாக்கள் பரவலாக பலருக்கு இருக்கிறது. ஆனால் அதை எப்படி தொடங்குவது, பதிவு செய்வது எப்படி, அரசாங்கம் என்னென்ன வசதிகள் செய்து கொடுக்கிறது, அவற்றை எப்படி உபயோகப்படுத்திக்கொள்வது எப்படி, யார் யார் உங்களுக்கு உதவுவார்கள், இந்தியாவில் டெக்னாலஜி அல்லாத ஸ்டார்ட் அப்கள் ஆரம்பித்து வெற்றி பெற்றவர்கள் யார் என்ற தலைப்புகளில் சேதுராமன் சாத்தப்பன் பேச இருக்கிறார். இது முற்றிலும் இலவச கருத்தரங்கம்.

  முன்பதிவு செய்ய 7010328830 என்ற எண்ணில் பேசலாம். ஆன் லைனில் ரெஜிஸ்டரேஷன் செய்ய http://maduraistartups.in/events/june-junction/
  ஸ்டார்ட் அப் ஐடியா உள்ளவர்கள், மாணவ, மாணவிகள், இளைஞர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம்.[...]
 • பிரதமர் ரணில்
 • அமெரிக்க அதிபர்

MANAGEMENT

AGRICULTURE

 • ஆடு வளர்ப்பு
  ஆடு, மாடு, கோழி வளர்ப்பு கிராம மக்களின் பொருளாதாரத்தை உயர்த்துவதில் குறிப்பிட்ட பங்கு வகிக்கிறது. வேளாண் மையுடன் இவற்றையும் சேர்த்துச் செய்பவர்களுக்கு கூடுதல் பயன் கிடைக்கிறது. இந்த வகையில் ஆடு வளர்ப்பைப் பற்றி பார்க்கலாம்.

  ஆடு வளர்ப்பை நன்கு திட்டமிட்டு நவீன அறிவியல் முறைப்படி பராமரித்தால் நல்ல லாபம் பெறலாம். ஆடுகளை வெயில், மழை, குளிர் ஆகியவற்றில் இருந்தும் மற்ற விலங்குகளிடம் இருந்தும் பாதுகாக்க கொட்டில் (கொட்டகை) அமைக்க வேண்டியது மிகத்தேவை ஆகும். தேவையான காற்றோட்டம், நீர் தேங்காத உலர்ந்த தரை, நல்ல வெளிச்சம் இருக்கும்படி கொட்டில் அமைக்கப்பட வேண்டும்.

  குறைந்த எண்ணிக்கையில் ஆடுகள் வளர்ப்பவர்கள் வீட்டின் ஒரு பக்க சுவரில் சாய்வாக கூரை அமைத்து வளர்க்கலாம். இரண்டு ஆடுகள் வளர்ப்பதற்கு பத்து அடி நீளம், ஐந்து அடி அகலம் உள்ள இடவசதி வேண்டும். வீட்டுச்சுவர் அருகே உயரம் எட்டு அடியாகவும், எதிர்ப்பக்க கூரையின் உயரம் ஆறு அடியாகவும் இருக்க வேண்டும். மூங்கில், சவுக்கு மரம், தென்னை ஓலை, பனை ஓலை, ஓடு ஆகியவற்றைப் பயன்படுத்தி கூரை அமைக்கலாம். பக்க வாட்டில் மூங்கில் பத்தை, சவுக்கு மரக் குச்சிகள் போன்றவை கொண்டு வேலி அமைக்க வேண்டும். கொட்டிலின் ஒருபுறம் கதவு ஒன்றும் அமைக்க வேண்டும்.

  அதிக எண்ணிக்கையில் ஆடுகள் வளர்க்க எண்ணும்போது, வயது வாரியாக அவற்றுக்கு தனிப்பட்ட கொட்டகைகள் அமைக்க வேண்டும். அவற்றை எப்படி அமைக்க வேண்டும் எனப் பார்க்கலாம்.

  வளர்ந்த பெட்டை ஆடுகளுக்கான கொட்டகை ஒரு கொட்டகையில் அறுபது ஆடுகள் வரை வளர்க்கலாம். ஆடு ஒன்றுக்கு பதினைந்து முதல் இருபது சதுர அடி வீதம் கணக்கிட்டு இடவசதி ஏற்படுத்தப்பட வேண்டும்.
  பொலி கிடாக்களுக்கான அறை – ஒவ்வொரு கிடாவிற்கும் முப்பது சதுர அடி இடம் உள்ள வகையில் தனித்தனியே அறைகள் அமைத்து அவற்றில் விட வேண்டும்.

  ஈனும் அறை:
  ஈனுவதற்கு பத்து அல்லது பதினைந்து நாட்களுக்கு முன்பு நிறை சினை ஆடுகளை ஈனும் அறைக்கு மாற்ற வேண்டும். இதற்கான அறை ஆறு அடி நீளமும் நான்கு அடி அகலமும் கொண்டதாக இருக்க வேண்டும். ஈனும் அறையைச் சுற்றிலும் கம்பி அல்லது பிளாஸ்டிக் வலை அடித்து பறவைகள் உள்ளே நுழையா வண்ணம் தடுக்க வேண்டும்.

  குட்டிகளுக்கான கொட்டகை முப்பத்தைந்து அடி நீளம், பதினைந்து அடி அகலம் உள்ள கொட்டகையில் எழுபத்தைந்து குட்டிகளை விடலாம். இந்த கொட்டகையிலும் தடுப்புகள் அமைத்து பால்குடி குட்டிகள், பால்குடி மறந்த குட்டிகளை தனித்தனியே விடலாம். கிடாக் குட்டிகள், பெட்டைக் குட்டிகளுக்கும் தனித்தனியே தடுப்பும் அமைக்கலாம்.

  நோய் வாய்ப்பட்ட ஆடுகளை பராமரிக்க ஒரு தனி அறை இருக்க வேண்டும். தீவனங்கள், கருவிகள் வைப்பதற்கு ஒரு அறை தேவைப்படும். ஆடுகளை எடை போடுவதற்கு ஒரு அறை இருக்க வேண்டும்.
  இனப்பெருக்க மேலாண்மைஆட்டுப் பண்ணையில் இருந்து கிடைக்கும் முதன்மையான வருமானங்களில் ஒன்று, கிடைக்கக் கூடிய குட்டிகள் ஆகும். எனவே அதிக எண்ணிக்கையில் குட்டிகள் கிடைக்கும் அளவில் பராமரிப்பு முறைகளை கைக்கொள்ள வேண்டும்.

  முதல் இனச்சேர்க்கை:
  பெட்டை ஆடுகள் சராசரியாக ஆறு மாதங்களில் பருவத்திற்கு வந்து விடும். ஆனால் இந்த வயதில் சினையைத் தாங்கிக் கொள்ளும் அளவுக்கு முழுவளர்ச்சி பெற்று இருக்காது. மிகவும் சின்ன வயதில் சினை தரிக்கும் ஆடுகளின் வளர்ச்சி பாதிக்கப்படும். குட்டிகள் ஈனுவதற்கும் சிரமப்படும். மேலும் குட்டிகளுக்குத் தேவையான பால் சுரப்பும் இருக்காது. எனவே பெட்டை ஆடுகளுக்கு ஒரு ஆண்டு ஆன பிறகுதான் இனச்சேர்க்கைக்கு அனுமதிக்க வேண்டும்.

  குட்டிகளுக்கு நான்கு மாதங்கள் ஆன பிறகு கிடாக் குட்டிகளையும், பெட்டைக் குட்டிகளையும் தனித்து வளர்க்க வேண்டும். இவ்வாறு பிரித்து வளர்க்கவில்லை என்றால் இளம் வயதிலேயே இனச்சேர்க்கை எற்பட்டு சினை தரித்து விடும்.

  குட்டி ஈனும் இடைவெளி:
  ஆடுகளின் சினைக்காலம் ஐந்து மாதங்கள். பெட்டை ஆடுகள் குட்டி போட்ட பின், மூன்று மாதங்கள் கழித்து மீண்டும் இனச்சேர்க்கை செய்தால் இரண்டு ஆண்டுகளில் மூன்று ஈத்துகள் கிடைக்கும். அதாவது குட்டி ஈனும் இடைவெளி எட்டு மாதங்களுக்கு மிகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

  இனப்பெருக்க சிறப்புத் தீவனம்:
  ஆடுகள் நன்றாக வளர்ச்சி அடைய நல்ல சூழ்நிலை, போதுமான சத்துள்ள தீவனம் மிகவும் தேவை ஆகும். பெட்டை ஆடுகளின் பருவ சுழற்சி ஆண்டு முழுவதும் நடைபெறும். ஆனால் கோடை காலங்களில் ஆடுகள் வெப்ப அயர்ச்சிக்கு உட்படுவதால் பருவ சுழற்சி நடைபெறுவது இல்லை. இனச் சேர்க்கைக்கு ஒரு மாதத்திற்கு முன்பிருந்து நாள்தோறும் ஆடு ஒன்றுக்கு கால் கிலோ வீதம் அடர் தீவனம் அல்லது சோளம், மக்காச் சோளம், கம்பு போன்ற தானியங்களைக் கொடுத்து வந்தால் ஆடுகள் முறையாக பருவத்துக்கு வந்து அதிக எண்ணிக்கையில் கருமுட்டைகள் வெளியாகி கருத்தரிப்பு விகிதம் அதிகரிக்கும்.

  ஆடு வளர்ப்பு பற்றிய எண்ணற்ற தளங்கள் இணையத்தில் உள்ளன. goat farming என்று கூகுளில் தட்டச்சு செய்தால் எண்ணற்ற தளங்கள் தோன்றுகின்றன. அவற்றில் இருந்து நமக்குத் தேவையான கூடுதல் செய்திகளைப் பெற முடியும்.[...]
 • sakthi
 • ரபெல் நடால், பெடரர்

EXP_IMP

 • rahul
  India is the 17th largest export economy in the world and the 45th most complex economy according to the Economic Complexity Index (ECI). In 2017, India exported $292B and imported $417B, resulting in a negative trade balance of $125B. In 2017 the GDP of India was $2.6T and its GDP per capita was $7.06k. The top exports of India are Refined Petroleum ($30.2B), Diamonds ($26.5B), Packaged Medicaments [...]
 • sakthi
 • Onu Plus Pro

SUCCESS STORIES

AGRICULTURE